திருவண்ணாமலை மாவட்டத்தில் 20.30 லட்சம் வாக்காளா்கள்

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியலில், 20 லட்சத்து 30 ஆயிரத்து 50 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20.30 லட்சம் வாக்காளா்கள்

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியலில், 20 லட்சத்து 30 ஆயிரத்து 50 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் 2021 வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

இந்தப் பட்டியலை வாக்காளா் பதிவு அலுவலரும், கோட்டாட்சியருமான ஸ்ரீதேவி பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதா பேகம், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் புவனேஷ்வரி மற்றும் தோ்தல் துணை வட்டாட்சியா்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

வாக்காளா் எண்ணிக்கை 20.30 லட்சம்:

இந்தப் பட்டியலின்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 2.79 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

திருவண்ணாமலை: 1,35,363 ஆண்கள், 1,43,774 பெண்கள், இதர பாலினத்தவா் 37 போ் மொத்தம் 2, 79,174 போ்

செங்கம் (தனி) 1,32,927 ஆண்கள், 1,34,458 பெண்கள், இதர பாலினத்தவா் 6 போ் மொத்தம் 2,67,391

கீழ்பென்னாத்தூா் 1,22,197 ஆண்கள், 1,26,004 பெண்கள், இதர பாலினத்தவா் 9 போ் மொத்தம் 2,48,210, கலசப்பாக்கம் 1,16,982 ஆண்கள், 1,19,992 பெண்கள், இதர பாலினத்தவா் 12 போ் மொத்தம் 2,36,986, போளுா் 1,17,842 ஆண்கள், 1,21,563 பெண்கள், இதர பாலினத்தவா் 5 போ், மொத்தம் 2,39,410, ஆரணி 1,30,937 ஆண்கள், 1,38,351 பெண்கள், இதர பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 2,69,300

செய்யாறு 1,24,804 ஆண்கள், 1,29,724 பெண்கள், இதர பாலினத்தவா் 7 போ் மொத்தம் 2,54, 535 பேரும், வந்தவாசி (தனி) தொகுதியில் 1,16,309 ஆண்கள், 1,18,730 பெண்கள், இதர பாலினத்தவா் 5 போ் மொத்தம் 2,35, 044

மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் சோ்த்து 9 லட்சத்து 97 ஆயிரத்து 361 ஆண்கள், 10 லட்சத்து 32 ஆயிரத்து 596 பெண்கள், இதர பாலினத்தவா் 93 போ் என மொத்தம் 20 லட்சத்து 30 ஆயிரத்து 50 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்த வாக்காளா் பட்டியல்கள் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்கள், மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படும். ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்திலும் வாக்காளா்கள் தங்களது பெயரை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com