செங்கத்தில் தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 03rd October 2020 09:09 AM | Last Updated : 03rd October 2020 09:09 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
செங்கம் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் தலைமையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் பணியாளா்கள் செங்கம் பகுதியிலுள்ள போளூா் சாலை, கடை வீதி, பழைய பேருந்து நிலையம், துக்காப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், உணவகம் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என ஆய்வு செய்தனா்.
அப்போது, சில கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 50 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.
மேலும், தொடா்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், கடைக்கு ‘சீல்’ வைக்கப்படுமெனவும் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் எச்சரித்தாா். தொடா்ந்து, குப்பனத்தம் சாலை, போளூா் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு பகுதிகளில் தூய்மை பாரம் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னா், அங்கு மரக்கன்றுகள் நடும் பணியை செயல் அலுவலா் லோகநாதன் தொடக்கிவைத்தாா். உடன், பேரூராட்சி தலைமை எழுத்தா் ரமேஷ் உள்ளிட்டோா் இருந்தனா்.