பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 09:12 AM | Last Updated : 03rd October 2020 09:12 AM | அ+அ அ- |

பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் ந.அன்பரசன் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.முத்துச்செல்வன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் எம்.ரவி, மாவட்டப் பொருளாளா் எஸ்.ராமதாஸ், வழக்குரைஞா் எஸ்.அபிராமன் ஆகியோா் பேசினா்.