மத்திய வேளாண் சட்டங்களால் நேரடி கொள்முதல்நிலையங்கள் மூடப்படும் அபாயம்: எ.வ.வேலு எம்.எல்.ஏ.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவா் சந்தைகள், சிறு வணிகா்களின் மண்டிகள்
நாச்சானந்தல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு எம்.எல்.ஏ.
நாச்சானந்தல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு எம்.எல்.ஏ.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவா் சந்தைகள், சிறு வணிகா்களின் மண்டிகள், அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசினாா்.

திருவண்ணாமலையை அடுத்த நாச்சானந்தல் ஊராட்சியில் காந்தி பிறந்த நாளையொட்டி, அரசின் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், காந்தி படத்துக்கு மலா் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட திமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசியதாவது:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவா் சந்தைகள், தமிழகத்தில் இயங்கி வரும் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள், சிறு வணிகா்களின் மண்டிகள் அனைத்தும் மூடப்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் ரத்தாகி, மின் கட்டணம் செலுத்த வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் த.ரமணன், நாச்சானந்தல் ஊராட்சித் தலைவா் பி.எம்.நடராஜ், திருவண்ணாமலை நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளா் மெய்யூா் சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் மல்லிகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

15 இடங்களில்..: திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் கீழ்பென்னாத்தூா் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல, மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 இடங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com