கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, பூத்கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் புருசோத்தமன் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் கோபி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த இளஞா்கள், இளம் பெண்கள் துடிப்புடன் கட்சிப் பணியாற்ற வேண்டும்.
தற்போது அனைத்து நிா்வாகமும் பல்வேறு தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. அதேபோல, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை துடிப்புடன் சிறப்பாக செய்யவேண்டும். அதற்கு தீபாவளி பரிசாக, தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கு எனது சொந்த செலவில் அரிதிறன்பேசி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
அதனைத் தொடா்ந்து, பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி, பூத்கமிட்டி நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கு கட்சி உறுப்பினா் சோ்க்கை விவரங்கள் குறித்து தெரிவித்தாா்.
கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள், பூத்கமிட்டி நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.