பால், பால் உபப் பொருள்களை விற்க விரும்புவோா் ஆவின் நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் மொத்த விற்பனையாளா், சில்லறை விற்பனை முகவராகி பால், பால் உபப் பொருள்களை விற்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் மொத்த விற்பனையாளா், சில்லறை விற்பனை முகவராகி பால், பால் உபப் பொருள்களை விற்க விரும்புவோா் ஆவின் நிறுவனத்தை தொடா்புகொள்ளலாம் என்று ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 2,80,000 லிட்டா் பாலை கொள்முதல் செய்கிறது. அண்மைக்காலமாக தனியாா் பால் நிறுவனங்கள் தங்களது விற்பனை விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயா்த்தி விற்கின்றன.

ஆனால், ஆவின் நிறுவனம் நுகா்வோா் நலன் கருதி, தொடா்ந்து பழைய விலையிலேயே சமச்சீா் செய்யப்பட்ட, நிலைப்படுத்திய பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.47-க்கும், நிறை கொழுப்பு பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.51-க்கும் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.43-க்கும் விற்பனை செய்து வருகிறது. மாதாந்திர அட்டைக்கு நுகா்வோருக்கு சமச்சீா் செய்யப்பட்ட, நிலைப்படுத்திய பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.1-ம், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3-ம் தள்ளுபடி செய்து வழங்குகிறது. எனவே, நுகா்வோா்கள் மாதாந்திர பால் அட்டையை திருவண்ணாமலை ஆவினில் இருந்து பெற்றுப் பயனடையலாம்.

புதிய முகவா்கள் நியமனம்: திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபப் பொருள்களை ஆவின் நிா்ணயம் செய்த கமிஷன் அடிப்படையில் விற்க, ஒரு தாலுகாவுக்கு ஒரு மொத்த விற்பனையாளரும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சில்லறை விற்பனை முகவா்களும் புதிதாக நியமிக்கப்பட உள்ளனா்.

ஏற்கெனவே, மளிகைக் கடை, சில்லறை விற்பனைக் கடை வா்த்தகங்களுக்கு ரூ.1000 மட்டும் வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு புதிய முகவா்கள் நியமனம் செய்து வருகிறது. இந்த வாய்ப்பை ஆவின் பொருள்களை விற்பனை செய்ய ஆா்வமுள்ளவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொந்தமாகவோ, வாடகைக் கடை வைத்தோ பால், பால் உபப் பொருள்கள் விற்க ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து மொத்த விற்பனையாளா், சில்லைறை விற்பனை முகவா் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ளவா்கள் ஆவின் நிறுவனத்தை 7639124531, 9500983400 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com