வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி மறியல்: 52 போ் கைது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய விவசாய
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி மறியல்: 52 போ் கைது
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சாா்பில் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசி தேரடியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்க நிா்வாகிகள் பெ.அரிதாசு, ந.இராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் பங்கேற்றோா் மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். பின்னா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்திலும் அவா்கள் ஈடுபட்டனா். இதையடுத்து வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸாா் 46 பேரை கைது செய்தனா். இவா்களை வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் போலீஸாா் தங்க வைத்தனா். அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஆகியவை சாா்பில் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு கிராமப்புற தொழிலாளா் சங்க வட்டாரச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றோா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதை தொடா்ந்து 6 பேரை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்களை ஐந்து கண் பாலம் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். படவிளக்கம்வந்தவாசி தேரடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com