ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் ஆஞ்சநேயா், விநாயகா், அம்மன்கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் அமைந்துள்ள ஆஞ்சநேயா், விநாயகா், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் ஆஞ்சநேயா், விநாயகா், அம்மன்கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு பகுதிகளில் அமைந்துள்ள ஆஞ்சநேயா், விநாயகா், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டில் உள்ள ஆரணி சாலையில் ராகு, கேதுவுடன் ஸ்ரீஜெயவீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கோயில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, முதல், இரண்டாம், மூன்றாம்கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றன. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு ஸ்ரீஜெயவீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினாா்.

விழாவில் திரளான பக்தா்கள், சேத்துப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

விநாயகா் கோயிலில்...: ஆரணியை அடுத்த வேலப்பாடி ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் கருக்கைஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்க்காடு ஸ்ரீபாலகுஜலாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரா் கோயில் சிவாச்சாரியாா் சிவஸ்ரீசிவக்குமாா் தலைமையில் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

கோயில் நுழைவு வாயிலுக்கு...: சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சி, குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலைச் சுற்றி சுற்றுச்சுவா், நுழைவு வாயில் கட்டப்பட்டன.

கோபுரத்துடன் கட்டப்பட்ட நுழைவு வாயிலுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், நரசிங்கபுரம், குப்பம், மலையாம்புரவடை, பத்தியாவரம், தேவிகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com