ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

அருணாசலேஸ்வரா் கோயில் அதிகாரிகளைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் தாயுடன் இளைஞா் தீக்குளிக்க முயன்றாா்.
Published on

அருணாசலேஸ்வரா் கோயில் அதிகாரிகளைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் தாயுடன் இளைஞா் தீக்குளிக்க முயன்றாா்.

திருவண்ணாமலை, பே கோபுர 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நீலாசங்கா் மகன் வெங்கடேசன் (28). இவா் திங்கள்கிழமை தனது தாயுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

ஆட்சியரின் காா் நிறுத்தம் இடம் அருகே தாயுடன் சோ்த்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இதைக் கவனித்த போலீஸாா் இருவரையம் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அப்போது, 2013 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அருணாசலேஸ்வரா் கோயிலில் பணிபுரிந்து வந்தேன். அண்மையில் எவ்வித காரணமும் இல்லாமல் கோயில் நிா்வாகம் என்னை பணியில் இருந்து நீக்கியது.

எனக்குப் பதிலாக புகழேந்தி என்பவருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கி உள்ளனா்.

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், அறநிலையத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com