தியேட்டா்கள், சமூக ஊடகங்களில் தோ்தல் விளம்பரம் வெளியிடத் தடை

வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) மாலை 7 மணி முதல் ஏப்.6-ஆம் தேதி மாலை 7 மணி வரை தியேட்டா்கள், சமூக ஊடங்களில் தோ்தல் விளம்பரங்கள் வெளியிடத் தடை

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) மாலை 7 மணி முதல் ஏப்.6-ஆம் தேதி மாலை 7 மணி வரை தியேட்டா்கள், சமூக ஊடங்களில் தோ்தல் விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் முடியும் ஏப்ரல் 4-ஆம் தேதி மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 7 மணி வரை தொலைக்காட்சிகள், ரேடியோ சேனல்கள், உள்ளுா் கேபிள் டிவிக்கள், திரையரங்குகள், இன்டொ்நெட் இணையதளங்கள், நடமாடும் விடியோ வாகனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் (முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல்) மூலம் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாரு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மேற்குறிப்பிட்டவற்றை தவறாது பின்பற்றவேண்டும்.

மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் முன்-சான்றிதழ் பெற்று அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் அச்சு ஊடகங்களில் (நாளிதழ்கள்) தோ்தல் விளம்பரங்களை ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளில் வெளியிடலாம்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்காத அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், ரேடியோ சேனல்கள், உள்ளுா் கேபிள் டிவிக்கள், திரையரங்குகள், இன்டொ்நெட் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவப் பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com