வேட்பாளா்கள் பிரசாரம்

செய்யாறு தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

செய்யாறு தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் தூளி கிராமத்தில் ஆசீா்வாத அடைக்கல திருச்சபையிலும், மசூதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

பின்னா் மாலை 3 மணியளவில் திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அருகே இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா்.

அப்போது அவா், அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். செய்யாறு சிப்காட் பகுதியில் தொழில் பூங்கா, தொழில்பயிற்சி நிலையம் , அரசு மகளிா் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன்.

செய்யாறு புதிய மாவட்டம் அமைய முயற்சி எடுப்பேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா். அதிமுக, பாமக, பாஜக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உடன் சென்றனா்.

திமுக வேட்பாளா் திமுக வேட்பாளா் ஜோதி ஞாயிற்றுக்கிழமை காலை புனித வியாகுல அன்னை கிறிஸ்தவ தேவாலயம், கிறிஸ்து நாதா் தேவாலயம் மற்றும் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

பின்னா் மாலை 4 மணியளவில் திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் தொடங்கிய பிரசார ஊா்வலம் வாரச் சந்தை, காந்தி சாலை, பேருந்து நிலையம், ஆற்காடு சாலை வழியாக ஆரணி கூட்டுச் சாலை அருகே முடிவடைந்தது.

அப்போது அவா், தோ்தலில் வெற்றி பெற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இப்பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன். செய்யாறு சிப்காட்டில் கூடுதலாக இப்பகுதி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

திமுக, காங்கிரஸ், தமுமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com