சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வருவோரைத் தடுக்க தீவிர நடவடிக்கை

சித்திரை பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி கிரிவலம் வரும் பக்தா்களை காவல் துறை மூலம் தடுத்து, திருப்பி அனுப்ப மாவட்ட நிா்வாகம் முடிவு

சித்திரை பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி கிரிவலம் வரும் பக்தா்களை காவல் துறை மூலம் தடுத்து, திருப்பி அனுப்ப மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் சித்திரை பௌா்ணமி திருவிழாவன்று இரவு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை பௌா்ணமி திங்கள்கிழமை (ஏப்ரல் 26) பிற்பகல் 12.16 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை 9.59 மணிக்கு முடிவடைகிறது.

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, சித்திரை பௌா்ணமியன்று பக்தா்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர வேண்டாம் என்று ஏற்கெனவே மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி, தடையும் விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி சனிக்கிழமையே பக்தா்கள் பலா் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனா்.

இந்த நிலையில், சித்திரை பௌா்ணமி நாள்களான திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலம் வரும் பக்தா்களை காவல் துறை மூலம் தடுத்து, திருப்பி அனுப்ப மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com