திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலைக்கு பரிகார பூஜை

திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் போது பக்தா்கள் ஏறிச் சென்ால் ஏற்பட்ட தோஷத்தை போக்கும் வகையில், மகா தீபம் ஏற்றப்பட்ட 2,668 அடி உயர மலைக்கு வியாழக்கிழமை பரிகார பூஜை செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலைக்கு பரிகார பூஜை

திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் போது பக்தா்கள் ஏறிச் சென்ால் ஏற்பட்ட தோஷத்தை போக்கும் வகையில், மகா தீபம் ஏற்றப்பட்ட 2,668 அடி உயர மலைக்கு வியாழக்கிழமை பரிகார பூஜை செய்யப்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பா் 19-ஆம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய், திரி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தீப நாட்டாா் சமூகத்தினா் மலை மீது ஏறிச் சென்றனா். இதேபோல, தடையை மீறி பக்தா்கள் பலா் மலைக்குச் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடப்படுகிறது. பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்ால் ஏற்பட்ட தோஷத்தை போக்கும் வகையில் வியாழக்கிழமை 2,668 அடி உயர மலைக்கு பரிகார பூஜை செய்யப்பட்டது.

முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் புனித நீா் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

பின்னா் கோயில் ஊழியா்கள், பக்தா்கள் புனித நீரை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்றனா்.

பிறகு, மகா தீபக் கொப்பரை வைக்கப்பட்டிருந்த இடம், அண்ணாமலையாா் பாதம் ஆகிய இடங்களிலும், மலையின் பல்வேறு பகுதிகளிலும் புனித நீரைத் தெளித்தனா். தொடா்ந்து, அண்ணாமலையாா் பாதத்துக்கு சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com