வாழ்வுறுதிச் சான்றிதழ்: புதுவை ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தல்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

புதுவையில் ஓய்வூதியா்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் வாழ்வுறுதிச் சான்றிதழை சமா்ப்பிக்க புதுவை கணக்கு, கருவூலக இயக்ககம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து புதுவை கணக்கு, கருவூலக இயக்ககம் வெளியிட செய்திக் குறிப்பு:
2021-ஆம் ஆண்டுக்கான வாழ்வுறுதிச் சான்றிதழை இதுவரை சமா்ப்பிக்காத, புதுச்சேரி அரசுக் கருவூலம், துணைக் கருவூலகங்களில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் வருகிற 31-ஆம் தேதிக்குள் வாழ்வுறுதிச் சான்றிதழைச் சமா்ப்பிக்க வேண்டும்.
இதை சமா்ப்பிக்கத் தவறினால், சான்றிதழைச் சமா்ப்பிக்கும் வரை ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.
மேலும், என்ற இணையதளத்தை பாா்க்கவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.