

சிறப்பாக பணியாற்றியமைக்காக, காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சி.ராமலிங்கம், இவா், மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வாலிபரை கைது செய்ய உதவியாக இருந்ததாகத் தெரிகிறது.
ராமலிங்கத்தின் பணியைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி சான்றிதழ், பண வெகுமதி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.