திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,500 பேருக்கு கரோனா தடுப்பூசி: மாவட்ட ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 04th February 2021 08:28 AM | Last Updated : 04th February 2021 08:28 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசியை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி போட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 10 ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். இவா்களில் இதுவரை 2,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை சாா்பில் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த ஊசியை செலுத்திக் கொண்டவா்கள் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுவா்.
மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 24 இடங்களில் நடைபெற்று வருகின்றன என்றாா்.
நிகழ்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.திருமால்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஷகில் அஹமது, துணை மருத்துவக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், குடியிருப்பு மருத்துவ அலுவலா் அரவிந்தன், நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜிதா ஆகியோா் உடனிருந்தனா்.
ரயில்வே மேம்பாலப் பணி ஆய்வு:
இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை மூலம் திருவண்ணாமலையில் ரூ.30.38 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, கோட்டாட்சியா் மா.ஸ்ரீதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...