

செய்யாற்றை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மருத்துவா்கள் வினோத்குமாா், என். ஈஸ்வரி ஆகியோா், பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தி பெண்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி கற்பித்தல், பாலியல் குற்றங்களை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்துதல் போன்றவை குறித்து தெரிவித்தனா்.
மேலும், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே. சம்பத், சமுதாய சுகாதார செவிலியா் ஹேமலதா, செவிலியா் கலைவாணி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.