பிப்.16-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 14th February 2021 08:32 AM | Last Updated : 14th February 2021 08:32 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 பலதரப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கூடுதல் எஸ்பி டி.அசோக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அலுவலா்களால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 81 பலதரப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் நுழைவுக் கட்டணமாக ரூ.100, முன்பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஏப்ரல் 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலத்தில் கலந்து கொள்வதற்கான ரசீதுகள் வழங்கப்படும்.
ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியும் சோ்த்து உடனே செலுத்த வேண்டும்.
ஏலம் எடுத்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம்.
மேலும் விவரங்களுக்கு 04175-233920 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.