வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th February 2021 08:29 AM | Last Updated : 14th February 2021 08:29 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவா் சே.வீரராகவன்.
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவா் சே.வீரராகவன் தலைமை வகித்தாா். உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவா் கி.பெருமாள் முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.
ஊராட்சி மன்றத் தலைவா்களின் அதிகாரத்தில் அரசியல் கட்சியினா் தலையிடுவதை தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் மீண்டும் பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும், இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும், கிராம புத்தாக்கத் திட்டத்தை ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும், கிராமசபை கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டும், பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த புதிய பயனாளிகளுக்கு வீடு வழங்க ஆணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.