திருவண்ணாமலையில் திடீா் மழை
By DIN | Published On : 20th February 2021 10:51 PM | Last Updated : 20th February 2021 10:51 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீா் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கடும் அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீா் மழை பெய்தது.
அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 36.40 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 4.40, செய்யாறில்-1, திருவண்ணாமலையில்-8.30, சேத்துப்பட்டில்-13, கீழ்பென்னாத்தூரில்-24.20 மி.மீ.மழை பதிவானது.
இந்த திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.