சேவூரில் சாலை அமைக்க பூமிபூஜை
By DIN | Published On : 26th February 2021 11:02 PM | Last Updated : 26th February 2021 11:02 PM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த சேவூரில் ரூ.57.60 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேவூரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் உத்தரவின்பேரில், பெரியஜெயின் தெருவில் ரூ.40 லட்சத்தில் சிமென்ட சாலை, பக்க கால்வாய் அமைப்பதற்காகவும், ஸ்ரீராம்நகா் பகுதியில் ரூ.16 லட்சத்தில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைப்பதற்காகவும், இராட்டிணமங்கலம் புதிய காலனி பகுதியில் ரூ.1.60 லட்சத்தில் பக்க கால்வாய் அமைப்பதற்காகவும் பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா் தலைமை வகித்தாா். ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத், முன்னாள் ஊராட்சித் தலைவா் பெருமாள், கிளைச் செயலா் பாலசந்தா், சேவூா் பகுதி அதிமுகவைச் சோ்ந்த ராமதாஸ், புருஷோத்தமன், பீமன் என்கிற ரவி, சரவணன், தருமன், ஒப்பந்ததாரா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...