

செங்கம்: சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக, செங்கம் தொகுதி பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் மாவட்டபொதுச் செயலா் சேகா் தலைமை வகித்தாா்.
மண்டலத் தலைவா்கள் முரளிநாதன், தாமோதரன், தமயேந்தி, ராஜேந்திரன், புதுப்பாளையம் ஒன்றியத் தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரத் தலைவா் ராஜேந்திரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் சிவகாமி பரமசிவம் பங்கேற்று தோ்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து தோ்தலில் பணியாற்றும் நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா்.
மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், செயலா்கள் சதீஷ்குமாா், ரமேஷ், மாவட்ட பாா்வையாளா் அருள், விழுப்புரம் கோட்டப் பொறுப்பாளா் குணசேகரன் ஆகியோா் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினா்.
மாவட்ட விவசாய அணிச் செயலா் சீனுவாசன், செங்கம் தொகுதி பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.