திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
By DIN | Published On : 27th February 2021 11:20 PM | Last Updated : 27th February 2021 11:20 PM | அ+அ அ- |

பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக பல்வேறு துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி பல்வேறு துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் அருண்லால், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷணமூா்த்தி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்டத்தில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்வதாசி ஆகிய 8 தொகுதிகளில் வருகிற ஏப்.6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.
தோ்தலை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், பொது இடங்கள், தனியாா் கட்டடங்கள் ஆகியவற்றில் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் சந்தீப் நந்தூரி விரிவாக எடுத்துரைத்தாா்.
மேலும், வாக்காளா்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்பணா்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
மேலும், தோ்தல் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அலுவலா்களுடன் அவா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, 24 மணி நேரம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...