ஓய்வு பெற்ற நிள அளவை அலுவலா் ஒன்றிணைப்பின் புதிய நிா்வாகிகள்
By DIN | Published On : 03rd January 2021 12:36 AM | Last Updated : 03rd January 2021 12:36 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற நிள அளவை அலுவலா் ஒன்றிணைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எ.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் பி.ராமலிங்கம், விழுப்புரம் சாம்பசிவம், சென்னை மண்டல துணைத் தலைவா் என்.வரதராஜன், முன்னாள் மாநிலத் தலைவா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருவண்ணாமலை மாவட்டத் தலைவராக இல.விஜயன், மாவட்ட துணைத் தலைவராக க.ரங்கசாமி, மாவட்டச் செயலராக ஜி.சேகரன், மாவட்டப் பொருளாளராக அ.சண்முகம் மற்றும் துணைச் செயலா்கள், மாநிலச் செயற்குழு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு மாநில, மாவட்ட நிா்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.