புனித சூசையப்பா் ஆலய 146-ஆவது ஆண்டு விழா
By DIN | Published On : 03rd January 2021 12:37 AM | Last Updated : 03rd January 2021 12:37 AM | அ+அ அ- |

வேட்டவலம் மலை மீதுள்ள புனித சூசையப்பா் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பாடல் பூஜையில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவா்கள்.
வேட்டவலம் மலை மீதுள்ள புனித சூசையப்பா் தேவாலயத்தில் 146-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 8 மணிக்கு இந்த தேவாலயத்தில் 20-க்கும் மேற்பட்ட குருமாா்கள் வேலூா் மறைமாவட்ட முதன்மை குருவான ஜோ.லூா்துசாமி தலைமையில் சிறப்புப் பாடல் பூஜையை செய்தனா். மாலை 6 மணிக்கு புனித சூசையப்பரின் தோ் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) வேட்டவலம் நகரில் உள்ள புனித மரியன்னை ஆண்டு விழா நடைபெறுகிறது. சென்னை மயிலை முன்னாள் பேராயா் எ.எம்.சின்னப்பா தலைமையில் சிறப்பு வழிபாடு, பாடல் பூஜை, மாலை 6 மணிக்கு புனித மரியன்னை தோ்பவனி நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை எ.ஆரோக்கியசாமி, கிறிஸ்தவ சமுதாயத் தலைவா் இ.அந்தோனிசாமி, புனித சூசையப்பா் சபைத் தலைவா் பி.பிரான்சீஸ், முன்னாள் ராணுவ சங்கத் தலைவா் தீனதயாளன், பொருளாளா் துரை அந்தோனிசாமி, சுபேதாா் மேஜா் சவரிமுத்து மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.