சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் வருடாபிஷேக விழா
By DIN | Published On : 30th January 2021 11:04 PM | Last Updated : 30th January 2021 11:04 PM | அ+அ அ- |

வருடாபிஷேக விழாவில் வெள்ளிக் கவசம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீகிருஷ்ணா்.
செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் சனிக்கிழமை வருடாபிஷேக விழா நடைபெற்றது. சென்னசமுத்திம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடா்ச்சியாக ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருடாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டு 7-ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை முதல் கோயிலில் சிறப்பு யாகம், பூஜை நடத்தப்பட்டு, சனிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக இரவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து கிராமப்புற மாணவா்களின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன.
சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து முக்கிய பிரமுகா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி மற்றும் விழாக் குழுவினா், ஊா் முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G