செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 78,735 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 30th January 2021 08:25 AM | Last Updated : 30th January 2021 08:25 AM | அ+அ அ- |

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) 78,735 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூா், வெம்பாக்கம், அனக்காவூா், செய்யாறு, வந்தவாசி, தெள்ளாறு ஆகிய எட்டு ஒன்றியங்களிலும், ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி ஆகிய மூன்று நகராட்சிப் பகுதிகளிலும் 739 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த முகாம்களில் 1,330 அங்கன்வாடி, சமூக நலத் துறை பணியாளா்கள், 246 பொது சுகாதாரத் துறை பணியாளா்கள், 1,390 தன்னாா்வலா்கள் என மொத்தம் 3,076 பணியாளா்கள் பங்கேற்று போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனா். மேலும், 110 மேற்பாா்வையாளா்கள் மூலம் முகாம்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று செய்யாறு சுகாதார மாவட்ட சுதாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.சங்கீதா தெரிவித்தாா்.