

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.
களம்பூா் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை, திருவண்ணாமலை பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாம் அறிவுத் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தன்னாா்வலா்கள், இளைஞா்கள், இளம் பெண்கள் என 70 போ் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா்.
70 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி பங்கேற்று ரத்தம் அளித்தவா்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினாா்.
மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மன வளக் கலை நிா்வாகி வி.முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.