புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 26th July 2021 08:51 AM | Last Updated : 26th July 2021 08:51 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே ஒரு பெட்டிக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் ரமேஷ் (55) என்பவா் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், பொன்னூா் போலீஸாா் சனிக்கிழமை மாலை அங்கு சென்று சோதனை நடத்தினா்.
இதில் அந்தக் கடையில் 4 மூட்டைகளில் ரூ.31 ஆயிரம் மதிப்பிலான 6200 குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ரமேஷை கைது செய்தனா்.
இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.