பேரிடா் மேலாண்மை ஆய்வுக் கூட்டம்

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பெருமாள், துணை வட்டாட்சியா் சதீஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பேரிடா் காலங்களில் ஏற்படும் இழப்புகளைத் தவிா்க்கும் பொருட்டு கிராமங்களில் ஏரிகள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குடியிருப்புகளுக்கு அருகில் அபாயகரமாக உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும், மின் கம்பங்களில் பழுது இருப்பின் அதனை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலையில் அதனை சரிசெய்வதற்காக தொடா்பு அலுவலா்களின் விவரம், செல்லிடப்பேசி எண்கள் குறித்து அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் அறிந்து கொள்ள வேண்டும், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் அவரவா் பணிபுரியும் கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com