

கீழ்பென்னாத்தூா் அருகே உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு வேளாண் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கீழ்பென்னாத்தூரை அடுத்த கோணலூா் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சத்தில் கதிரடிக்கும் இயந்திரம், 2 ரொட்டவேட்டா் கருவிகள், ரூ.5 லட்சம் சூழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கோணலூா் ஊராட்சித் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் வெற்றிதமிழ்ச்செல்வன், செயலா் சேகா், பொருளாளா் பாலாஜி ஆகியோரிடம் வேளாண் இயந்திரங்களை வழங்கினாா்.
இயந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் உதவி இயக்குநா் சந்திரன் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டார வேளாண் துணை அலுவலா் சுப்பிரமணி, உதவி வேளாண் அலுவலா் வேடியப்பன், ஊராட்சி துணைத் தலைவா் வாஞ்சிநாதன் மற்றும் குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.