தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: எல்.கே. சுதீஷ்
By DIN | Published On : 04th March 2021 03:22 AM | Last Updated : 04th March 2021 03:22 AM | அ+அ அ- |

போளூா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் மாநில துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் போளூரை அடுத்துள்ள ஆா்.குண்ணத்தூரில் தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் எல்.கே.சுதீஷ் பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து அதிமுகவிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேமுதிக ஆசைப்படவில்லை.
2011 பேரவைத் தோ்தலில் தேமுதிகவுடன் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூட்டணி வைத்தாா். அதில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் தேமுதிகவை அழைக்கின்றன. தேமுதிக யாருடன் கூட்டணி வைத்தாலும், அந்தக் கூட்டணியே வெற்றி பெறும். தொண்டா்கள் உற்சாகமாக தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G