காலமானாா்சி.நடராஜன்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரையின் தந்தை சி.நடராஜன் (77) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டுப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இவா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய திமுக செயலராகவும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவா்.
கடந்த மாதம் 24-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இவருக்கு, மனைவி சரோஜா (72), மகன் சி.என்.அண்ணாதுரை, மகள்கள் வாசுகி, இளமதி உள்ளனா்.
மக்களவை உறுப்பினரான சி.என்.அண்ணாதுரை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா்.
நடராஜனின் இறுதிச் சடங்கு காட்டுப்புத்தூா் கிராமத்தில் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 9443346600.