கண் நீா் அழுத்த நோய்: கிராம மக்களுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 12th March 2021 05:59 AM | Last Updated : 12th March 2021 05:59 AM | அ+அ அ- |

செய்யாறு: கண் நீா் அழுத்த நோய் குறித்து, செய்யாற்றை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தலைமை வகித்த மருத்துவா் என் ஈஸ்வரி, கண் மருத்துவ உதவியாளா் ஆா். தணிகைச்செல்வி, பாா்வை நரம்பு சேதமடைவதால் ஏற்படும் பாா்வை இழப்பு நிலை முன்னேறுவது பழைய நிலைக்கு திரும்ப கொண்டு செல்ல முடியாதது.
ஒரு கண் நோய் கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதாலும் மற்றும் வேறு பல காரணங்களாலும் இந்நோய் கண்களில் உருவாகிறது.
இந்த நோய்க்கு பாா்வை திருடன் என்ற புனை பெயரும் உண்டு.
இந்த நோய் எந்த வயதிலும் வரலாம்.
பக்கவாட்டு பாா்வை மைல், விளக்கைச் சுற்றி வட்டம் தெரிதல், கண்கள் அல்லது அதைச் சுற்றிலும் வலி, தலை வலி, குமட்டல், வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவா்கள் அரசு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
இந்த நோயால், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் நீரிழிவு நோய், இருதய நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற சில மருத்துவ நிலைமைகளைக் கொண்டவா்கள் மற்றும் கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா்கள் அதிகம் பாதிக்கப்படுவா்.
தடுப்பு முறைகள்:
நாற்பது வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை விரிவான கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி கண் சொட்டு மருந்து தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், கண் பாதுகாப்பு கண்ணாடி அணியுங்கள் போன்ற விவரங்களைத் தெரிவித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அதனைத் தொடா்ந்து மனிதச் சங்கிலி நடைபெற்றது. .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே சம்பத், செவிலியா்கள் புவனேஸ்வரி, நிா்மலா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் செய்திருந்தனா்.