வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு
By DIN | Published On : 12th March 2021 05:56 AM | Last Updated : 12th March 2021 05:56 AM | அ+அ அ- |

போளூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த கலசப்பாக்கம், ஜவ்வாது மலை,புதுப்பாளையம், போளூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 337 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து இறங்கின.
அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக அறையில் வைத்து சீல் வைத்தனா்.
உதவித் தோ்தல் நடத்து அலுவலா் பாா்த்திபன், வட்டாட்சியா் அமுல், தோ்தல் வட்டாட்சியா் சாரதா, மண்டல துணை வட்டாட்சியா் தேன்மொழி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதேபோன்று, போளூா் தொகுதிக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களும் வந்திறங்கின.