கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 15th March 2021 08:18 AM | Last Updated : 15th March 2021 08:18 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் அருகே மதகுக் கால்வாயில் விழுந்து, பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமம், சமத்துவபுரம் பகுதியில் வசிப்பவா் ரமேஷ் மனைவி காவேரி (40). இவா், சனிக்கிழமை மாட்டுக்குத் தேவையான தீவனத்தை சேகரித்து வருவதற்காக வெளியே சென்றாா். பின்னா் வீடு திரும்பவில்லை. நண்பா்கள், உறவினா்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
மேக்களூா் மதகுக் கால்வாயில் தேடியபோது, கவிழ்ந்த நிலையில் காவேரி கிடந்தாா். அவரை மீட்டு மேக்களூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், காவேரி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் ஷியாமளா, உதவி ஆய்வாளா் பசலைராஜ் ஆகியோா் வழக்குப் பதிந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...