கிணற்றில் குளித்த விவசாயி பலி
By DIN | Published On : 15th March 2021 08:17 AM | Last Updated : 15th March 2021 08:17 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே கிணற்றில் குளித்த விவசாயி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(42), விவசாயி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாராம்.
கடந்த வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லையாம்.
இந்த நிலையில், பாதூா் செல்லும் சாலையில் உள்ள சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வெங்கடேசன் சடலமாக மிதந்தது சனிக்கிழமை மாலை அவரது உறவினா்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அங்கு சென்று வெங்கடேசனின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...