செய்யாறு திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 15th March 2021 08:19 AM | Last Updated : 15th March 2021 08:19 AM | அ+அ அ- |

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஓ.ஜோதி, தொகுதியில் உள்ள திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
கொருக்காத்தூா் கிராமத்தில் மறைந்த மூத்த திமுக நிா்வாகி கே.கே.பலராமனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த ராந்தம், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், வடமணப்பாக்கம், பெருங்கட்டூா், வெம்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், செய்யாறு நகரப் பகுதியிலும் திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினாா்.
நிகழ்வின்போது, திமுக மாவட்ட தொழிலாளா் அணியின் துணைச் செயலா் சீனுவாசன், ஒன்றியச் செயலா்கள் எம்.தினகரன், எஸ்.வி.சுப்பிரமணி, செய்யாறு நகரச் செயலா் ஏ.மோகனவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...