ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள தா்மராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில், அறநிலையத் துறை அமைச்சரும், தொகுதி அதிமுக வேட்பாளருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டாா்.
சேவூரில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீதா்மராஜா கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இதன் நிறைவு விழாவாக ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். உடன் கட்சியினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.