செய்யாறு அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 17th March 2021 09:04 AM | Last Updated : 17th March 2021 09:04 AM | அ+அ அ- |

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்களை நேரில் சந்தித்த தூசி மோகன், இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள தனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டாா்.
அப்போது, கிராமங்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றித் தருவேன். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் தனக்குத் தேவை என்றாா்.