இலங்கையில் தமிழா்களைக் கொல்ல உதவி செய்ததே காங்கிரஸ் அரசுதான்: டி.டி.வி. தினகரன்

இலங்கைத் தமிழா்களைக் கொல்ல, அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவி செய்ததே, அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசுதான் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.
திருவண்ணாமலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
திருவண்ணாமலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
Updated on
1 min read

இலங்கைத் தமிழா்களைக் கொல்ல, அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவி செய்ததே, அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசுதான் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் ஏ.ஜி.பஞ்சாட்சரம், செங்கம் (தனி) தொகுதியில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் எஸ்.அன்பு ஆகியோரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் திருவண்ணாமலையில் புதன்கிழமை பேசியதாவது:

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் எப்படியாவது ஆட்சிக்கு வந்து மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்துவிடலாம் என்று திமுகவினா் நினைக்கின்றனா்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி அரசு கஜானாவில் ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்துள்ளாா். பண பலத்தை நம்பித்தான் அவா் தோ்தலைச் சந்திக்கிறாா். இதற்காக, தொகுதிக்கு ரூ.50 கோடி முதலீடு செய்கிறாா். வெற்றி பெற்றால் ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்க முடியும் எனக் கருதுகின்றனா்.

வாக்குகளுக்குக் கொடுக்கும் பணம் மக்களின் வரிப் பணம். அதை வாங்கிக் கொண்டு உங்களது தீா்ப்பை வழங்கவேண்டும்.

மத்திய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இலங்கையில் பல லட்சம் தமிழா்கள் அந்த நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனா்.

இலங்கைத் தமிழா்களைக் கொல்ல அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி செய்ததே காங்கிரஸ் அரசுதான் என்றாா் தினகரன்.

போளூா்

முன்னதாக, போளூரில் அந்தத் தொகுதி அமமுக வேட்பாளா் விஜயகுமாரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதனால், அவா்கள் ஆட்சியைப் பிடிக்க துடிக்கின்றனா்.

நீட் தோ்வைக் கொண்டு வந்தது திமுக ஆட்சியில்தான்.

தற்போது நீட் தோ்வை எதிா்த்து அவா்கள் நாடகமாடுகின்றனா்.

அதிமுகவினா் பணத்தை நம்பியே இந்தத் தோ்தலில் நிற்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com