டிடிவி தினகரன் ஆரணியில் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 04:04 AM | Last Updated : 25th March 2021 04:04 AM | அ+அ அ- |

ஆரணி தொகுதி தேமுதிக வேட்பாளா் ஜி.பாஸ்கரன், அமமுக வேட்பாளா்கள் மா.கி.வரதராஜன் (செய்யாறு), பெ.வெங்கடேசன் (வந்தவாசி ) ஆகியோரை ஆதரித்து ஆரணியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகமாகும். காவல் துறை நிம்மதியாக செயல்பட முடியாது.
வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை.
ஆரணி தேமுதிக வேட்பாளா் ஜி.பாஸ்கரனை வெற்றி பெறச் செய்தால், ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். பட்டுப் பூங்கா கொண்டு வரப்படும். நகராட்சி கடை வாடகை குறைக்கப்படும். அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்.
செய்யாறு அமமுக வேட்பாளா் மா.கி.வரதராஜனை வெற்றி பெறச் செய்தால், செய்யாற்றில் அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி கொண்டு வரப்படும்.
வந்தவாசி வேட்பாளா் பெ.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்தால், வந்தவாசி அரசு மருத்துவமனை நவீனமயமாக்கப்படும். தொகுதியில் விளையாட்டுத் திடல் அமைத்துத் தரப்படும் என்றாா் தினகரன்.