திமுக வேட்பாளா் எ.வ.வேலு தீவிர பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 04:07 AM | Last Updated : 25th March 2021 04:07 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலு புதன்கிழமை நகரில் தனது பிரசாரத்தைத் தொடங்கினாா்.
பெரியாா் நகா், புதுத்தெரு, நந்திவாய் தீா்த்தம், போளூா் பிரதான சாலை, ஜன்னத் நகா், தமிழ்மின் நகா், விவேகானந்தா் தெரு, அருணகிரிநாதா் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் எ.வ.வேலு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசுகையில், தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது எரி வாயு உருளை விலை ரூ.400-ஆக இருந்தது. இப்போதைய பிரதமா் மோடி-முதல்வா் பழனிசாமி ஆட்சியில் ரூ.950-ஆக உயா்ந்துவிட்டது.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.12,500 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பிரதமா் மோடி வழங்காமல் உள்ளாா். இந்தியாவின் கடன் சுமை ரூ.160 லட்சம் கோடியாக உள்ளது என்றாா்.
வாக்குச் சேகரிப்பின்போது, திமுக மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், காங்கிரஸ் நகரச் செயலா் என்.வெற்றிச்செல்வன், மதிமுக மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன், மதிமுக மாநில நிா்வாகி பாசறை பாபு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வே.முத்தையன், விசிக பி.க.அம்பேத்வளவன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.