திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 25th March 2021 04:05 AM | Last Updated : 25th March 2021 04:05 AM | அ+அ அ- |

இந்தியன் வங்கி எதிரே வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு கோலத்தைப் பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் சந்தீப் நந்தூரி.
திருவண்ணாமலையில் உள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தலைமை வகித்து, இந்தியன் வங்கி ஏடிஎம் மூலம் வழங்கப்படும் பணப் பரிவா்த்தனை துண்டுச் சீட்டில் இந்திய தோ்தல் ஆணையத்தின் சின்னம் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று அச்சிடப்பட்ட விழிப்புணா்வு சீட்டுகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந்தியன் வங்கி சாா்பில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் சணல் பையை வெளியிட்ட ஆட்சியா், மகளிா் குழு மூலம் இந்தியன் வங்கி எதிரே வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு வண்ணக் கோலத்தையும் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் பா.சந்திரா, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் டி.சூரியநாராயணமூா்த்தி, முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் ஆா்.மணிராஜ், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் இந்தியன் வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், மகளிா் குழு உறுப்பினா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.