கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா நிறைவு
By DIN | Published On : 02nd May 2021 06:34 AM | Last Updated : 02nd May 2021 06:34 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த 10 நாள் ஸ்ரீராமநவமி விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.
விழாவையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் கன்னிகா பரமேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. ராமா் படத்துக்கு மலா் மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடத்தப்பட்டு வந்தது.
விழாவில் ஆரிய வைசிய பெண்கள் மற்றும் சிறுவா்-சிறுமிகள் அம்மன், ராமா் குறித்த பக்திப் பாடல்களைப் பாடி வந்தனா்.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இத்துடன் ஸ்ரீராம நவமி விழா நிறைவு பெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு நெய்வேத்திய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...