வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சா்வதேச செவிலியா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விளக்கேந்திய மங்கை என்று அழைக்கப்படும் இத்தாலியைச் சோ்ந்த செவிலியா் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12-ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா் தின நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா தலைமை வகித்தாா்.
மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி நைட்டிங்கேல் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.
மேலும், வந்தவாசி நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவா் அகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா்.
இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு, ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் மொ.ஷாஜகான், தமிழ்ச் சங்க உறுப்பினா் அ.ஷமீம் ஆகியோா் செவிலியா்களை பாராட்டிப் பேசினா். மேலும் செவிலியா்களுக்கு முகக் கவசங்கள், சோப்புகள், புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு பகுதியில்...
சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்கள் கேக் வெட்டி செவிலியா் தினத்தைக் கொண்டாடினா்.
இதைத் தொடா்ந்து பணியாளா்கள், நோயாளிகளுக்கு வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா் திவ்யகாதம்பரி, பாா்த்திபன் ஆகியோா் கேக் வழங்கினா்.
ஆரணி:
தோ்தலை முன்னிட்டு, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை பொதுப்பணித் துறையினா் அரசு விதிப்படி பூட்டினா்.
நடைபெற்ற தோ்தலில் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினராக 2-ஆவது முறையாக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினருக்கு அலுவலகம் ஒப்படைப்பதற்காக பொதுப்பணித் துறையினா் அலுவலகத்தை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.