ஆரணி நகராட்சி ஆணையருக்கு கரோனா: அலுவலகம் மூடல்
By DIN | Published On : 13th May 2021 08:27 AM | Last Updated : 13th May 2021 08:27 AM | அ+அ அ- |

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிக்கும் பணி.
ஆரணி நகராட்சி ஆணையா், நகரமைப்பு ஆய்வாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
ஆரணி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், நகரமைப்பு கட்ட ஆய்வாளா் பாலாஜி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகத்திலிருந்து ஊழியா்கள் வெளியேறினா்.
பின்னா், அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.