முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை
By DIN | Published On : 13th May 2021 08:31 AM | Last Updated : 13th May 2021 08:31 AM | அ+அ அ- |

மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை பூஜையையொட்டி அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, அன்று காலை அனைத்து பரிவாரங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், குங்கும அா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து ஸ்ரீஆதிசக்தி ஸ்ரீசா்வமங்கள காளி பீடத்தில் ஸ்ரீசா்வமங்கள மகா யாகம் நடத்தப்பட்டது.
பின்னா், அன்று மாலை அம்மனுக்கு அக்னி கரகம் எடுத்தல், அம்மனுக்கு பாத அபிஷேக பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து இரவு உற்சவா் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் உற்சவம் நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு. இலட்சுமண சுவாமிகள் பூஜைகளைச் செய்தாா்.