கரோனா தடுப்பு: போளூரில் போலீஸாா் தீவிர வாகன சோதனை
By DIN | Published On : 19th May 2021 08:36 AM | Last Updated : 19th May 2021 08:36 AM | அ+அ அ- |

போளூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, போலீஸாா் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களை செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை செய்து அனுப்பிவைத்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில்,
அரசு சாா்பில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. மேலும், பொது முடக்க காலத்தில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றுகின்றனா்.
இதனால், போளூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையில் போலீஸாா் வசூா் கூட்டுச் சாலையில் போளூா்-திருவண்ணாமலை, போளூா்-செங்கம் செல்லும் இ-பாஸ் இல்லாத இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.